என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நாஞ்சில் அன்பழகன்
நீங்கள் தேடியது "நாஞ்சில் அன்பழகன்"
இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்கள் தொடர மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட இயக்குனருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் கூறியுள்ளார். #ADMK
சென்னை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட இயக்குனருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க.வை நிறுவியவர் புரட்சித்தலைவர் என்றால் அதனை சாதனைகளில் சிகரமேற்றி வளர்த்தெடுத்தவர் புரட்சித் தலைவிதான். இந்தி என்ற அரக்கனை தமிழ் மண்ணில் கால் பதிக்க விடாமல் விரட்டி அடித்தவர் அண்ணா. தி.மு.க.வை உருவாக்கிய அண்ணா அதன் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் பாடுபட்டார். அண்ணாவின் பேச்சாற்றலும் எம்.ஜி.ஆரின் வசீகரமும் 1967 தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு வித்திட்டது.
அறநெறி தவறாமல் ஆட்சி செய்யும் மன்னனுடைய நாட்டில் நல்ல மழையும் அமோக விளைச்சலும் இருக்கும் என்பது வள்ளுவரின் வாக்கு. அம்மாவின் நல்லாட்சியை நடத்தி வரும் எடப்பாடியாரின் ஆட்சியிலும் வான் மழை பொழிந்து விவசாயம் செழித்து வளர்ந்து வருகிறது.
இனி வரும் எந்த தேர்தல்களிலும் அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது. திருப்பரங்குன்றம்-திருவாரூர் இடைத்தேர்தல்களில் அம்மாவின் சாதனை திட்டங்கள் தொடர மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள். அ.தி.மு.க. என்ற எக்கு கோட்டையை எந்த காலத்திலும் எந்த தீய சக்தியாலும் வீழ்த்த முடியாது.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK

சத்துணவு திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர். என்று நூல் வெளியீட்டு விழாவில் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசினார்.
சென்னை:
வண்டலூர் தலைநகர் தமிழ் சங்கத்தில் நடந்த ஐ.ஆறுமுகம் எழுதிய ‘திருமுறை அமிழ்தம்’ நூலை வெளியீட்டு திரைப்பட இயக்குனரும், அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன் பேசியதாவது:-
கடலானது கதிரவனின் வெப்பம் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டு தான் பொங்கும். அது போல் கடலால் சுற்றி வளைக்கப்பட்ட பரந்த உலகில் வாழும் மக்கள் இன்சொற்களுக்கன்றி சுடும் சொற்களைக் கேட்டு மகிழமாட்டார்கள்.
பசி நினைத்தால் மனிதன் ஒருவனை மிருக மாக்க முடியும். ஒரு மிருகத்தைத் தாலாட்டித் தூங்க வைக்கவும் முடியும். பசிக்காகப் பள்ளிக்கு வந்தவர்கள் பின்பு பதவிகளால் இளைப்பாற் வைத்து மகத்தான மாற்றத்தை சாமானியர்களிடம் ஏற்படுத்தியது சத்துணவுத் திட்டம். இந்த திட்டத்தைப் பிரசவித்தவர் காமராஜர், சீராட்டி வளர்த்தவர் எம்.ஜி.ஆர். இந்த மகத்தான மனிதர்களின் கருணையால் தான் அரை நூற்றாண்டுத்தமிழர்கள் ரத்த சோகையை வென்று சத்துணவில் வாகை சூடினார்கள்.
தமிழ் உரை நடையின் பிரசவ வடிவத்தை சிலப்பதிகாரத்திலும், கவிதை வடிவின் நீரோட்டத்தை கம்பராமயாணத்திலும் காணலாம். மொட்டாக இருந்த திருக்குறளை மலரவைத்து, மனம் பறப்ப வைத்தது பரிமேலழகரின் உரைநடையே ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

×

X